உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்: நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
CM News Today - உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சுந்தரத்தை அவரது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்;
முன்னாள் அமைச்சரை நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.
CM News Today - மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தவர் க.சுந்தரம். இவர் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பால்வளத்துறை என இரு முறை அமைச்சராக இருந்தவர். 74 வயதான இவருக்கு அண்மையில் உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வுபெற்று வருகிறார். இந்த நிலையில் உடல் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள க.சுந்தரத்தின் வீட்டிற்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நலம் குறித்தும் மருத்துவ சிகிச்சை குறித்தும் அவரது குடும்பத்தாரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவரது 3மாத பேத்திக்கு திராவிடச்செல்வி என முதலமைச்சர் பெயர் சூட்டினார். தந்தையின் அமைச்சரவையில் இருந்த முன்னாள் அமைச்சரை வீடு தேடி வந்து முதல்வர் நலம் விசாரித்தது கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. க.சுந்தரம் திமுகவின் ஆதிதிராவிட நலத்துறை மாநிலச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2