நாட்டிலேயே முதன்முதலாக ஊராட்சி சார்பில் அலையாத்திச் செடிகள் வளர்ப்பு

நாட்டிலேயே முதன்முதலாக பஞ்சாயத்து சார்பில் அலையாத்திச் செடிகள் வளர்ப்பதை கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா பார்வையிட்டார்.;

Update: 2023-09-08 15:53 GMT

தாங்கல் பெரும்புலம் ஊராட்சியில் அலையாத்தி செடிகள் நடவு செய்யப்பட்டது.

நாட்டிலேயே முதன்முதலாக ஊராட்சி சார்பில் அலையாத்திச் செடிகள் வளர்க்கப்படுவதை திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் எசுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள தாங்கல் பெரும்புலம் ஊராட்சியில் பழவேற்காடு ஏரி பகுதி மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் அலையாத்தி செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே முதன்முதலாக தாங்கல் பெரும்புலம் ஊராட்சி மன்றம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கால்வாய்கள் அமைத்து அலையாத்தி செடிகள் நட்டு தக்க பணியாளர்கள் கொண்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஏரியின் தட்பவெட்பத்தை பாதுகாக்கவும், மீன் வளத்தை அதிகரிக்கவும், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், மீன் மற்றும் இறால், நண்டுகளுக்கு, அலையாத்தி செடிகளின் இலைகள் உணவாகவும் பயன்படுவதால் அலையாத்திச் செடிகள் வளர்ப்பது அவசியமாகிறது.பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஏரி பகுதியிலும் பக்கிங்காம் கால்வாய் பகுதியிலும் அடர்ந்த அலையாத்தி காடுகள் இருந்த நிலையில் தற்போது  தொழிற்சாலைகளின் உற்பத்தியாலும்,சமூகவிரோதிகளாலும் அழிக்கப்பட்டு வெறும் தரைகளாக காட்சியளிக்கின்றன.

இந்த இடங்களில் மீண்டும் அலையாத்தி செடிகளை வளர்ப்பதற்காக தாங்கல் பெரும்புலம் ஊராட்சி மன்றம் சார்பில் அதன் தலைவர் ஞானவேல் ஏற்பாட்டில் அலையாத்தி எனும் திட்டத்தின் மூலமாகவும் மேங்ரூஸ் பவுண்டேஷன் ஆப் இந்தியா இன்னும் திட்டத்தின் வாயிலாகவும் இணைந்து அலையாத்தி செடிகளை நட்டு வைத்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அலையாத்தி காடுகள் வளர்ப்பு பனை விதைகள் நடுதல் மற்றும் இதர செடிகள் நடும் நிகழ்ச்சிக்காக திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு அலையாத்தி செடிகள் மற்றும் பனை விதைகளை நட்டார். இந்த நிகழ்ச்சிக்கு அலையாத்தி திட்ட தலைவர் அட்வித்யா தாபா, விஜய் செந்தில்குமார்,மேங்ரோஸ் பவுண்டேஷன் ஆப் இந்தியா திட்டமேளாளர் மீராசா,யுனைடெட் வே பெங்களூர் முதன்மை திட்ட அலுவலர் ஹரி கோவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு அலையாத்தி வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினர்.மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர்,குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News