Farmer Awareness Meet பொன்னேரியில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் :அதிகாரிகளுடன் வாக்குவாதம்.

Farmer Awareness Meet பொன்னேரியில் நடைபெற்ற விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் விவசாயிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-11-17 04:00 GMT

விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும் விவசாயிகள் 

Farmer Awareness Meet

பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் நெற்பயிர்களை தாக்கும் இலைசுருட்டு புழு, புகையான் நோய். பயிர் பாதுகாப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்திய வேளாண் அதிகாரிகள். முன்கூட்டியே கள ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது ஏன் என அதிகாரிகளுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம் செய்ததால்  பரபரப்பு ஏற்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் சுமார் 13000ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் இலைசுருட்டு புழு, தண்டுதுளைப்பான், புகையான் நோய் போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் பொன்னேரியில் பயிர் பாதுகாப்பு முறையின் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Farmer Awareness Meet


பொன்னேரியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த விவசாயிகள் 

வேளாண்துறை அதிகாரிகள் தலைமையில் பொன்னேரி சுற்றுவட்டார விவசாயிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் நெற்பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாப்பது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அப்போது விவசாயிகள் வேளாண் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்தாண்டு பாதித்த நோய் தாக்குதலே இந்தாண்டும் பயிர்களை பாதித்துள்ளதாக தற்போது அதிகாரிகள் கூறுவதாகவும், பெரும்பாலான இடங்களில் நெற்பயிர்கள் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ள நிலையில் முன் கூட்டியே அதிகாரிகள் உரிய வழிமுறைகளை விவசாயிகளுக்கு அறிவுறுத்த தவறியதாக குற்றம் சாட்டினர். ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையும் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் தெரிவித்தனர்.

மேலும் பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் உரம், பூச்சிக்கொல்லி விற்பனை செய்யும் கடைகளில் முறையான விலை பட்டியல் பராமரிக்கப்படுவதில்லை எனவும், விவசாயிகளிடம் அதிக லாபத்திற்கு மருந்து பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை வேளாண்துறை துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என குற்றம் சாட்டினர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அதிகாரி தற்போது வரையில் 2800ஹெக்டர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

Tags:    

Similar News