சோழவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் திருவிழா
பாரம்பரிய மிக்க விளையாட்டுகளான சிலம்பம், கைபந்து, கோலம், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
பொன்னேரி அடுத்த சோழவரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் காவல் ஆணையரத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் திருவிழா சோழவரம் சரக காவல் ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் இவ்விழாவில் பாரம்பர்ய மிக்க விளையாட்டுகளான சிலம்பம், கைபந்து, கோலம், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து செங்குன்றம் சரக உதவி ஆணையர் முருகேசன் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக செங்குன்றம் காவல் துணை ஆணையர் மணிவண்ணன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி வாழ்த்தினர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆத்தூர் சற்குணன், புதிய மற்றும் பழைய எருமைவெட்டிபாளையம் வெங்கட்ராமன், ஸ்ரீதர், சோத்துபேரும்பேடு தனலட்சுமி சீனிவாசன், நெற்குன்றம் பாபு, கவுன்சிலர் தீபா நாகராஜன் உள்ளிட்ட காவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் செந்தில் அனைவருக்கும் நன்றி கூறினார்.