எண்ணூர் காமராஜர் துறைமுக கப்பலில் தேசிய கொடி ஏற்றினார் மத்திய அமைச்சர்

எண்ணூர் காமராஜர் துறைமுக கப்பலில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தேசிய கொடி ஏற்றினார்

Update: 2022-08-14 07:00 GMT

எண்ணூர் துறைமுக கப்பலில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால்  தொடங்கி வைத்தார். காமராஜர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்டைனர் சோதனை மையம், உட்புற சாலைகள், வாகன நிறுத்துமிடம், ஓய்வறை உள்ளிட்டவற்றை ஒன்றிய அமைச்சர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும் காமராஜர் துறைமுகத்திற்கு வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரூ. 195கோடி  மதிப்பீட்டில் 7.1 கிமீ. தூரத்திற்கு கான்கிரீட்டால் அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து 75வது சுதந்திர அமுத விழாவின் ஒரு பகுதியாக வீடுகள் தோறும் தேசிய கொடி என்பதை போல கப்பல்களில் தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து கப்பல்களில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து துறைமுகத்தில் சரக்கு கையாள்வது குறித்து துறைமுக அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர் கேட்டறிந்தார்.

Tags:    

Similar News