பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை
வெங்கல் அருகே எம். ஜி.ஆர் நகர் பகுதியில் முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை.;
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள வெங்கல் கிராமத்திற்கு உட்பட்ட எம். ஜி.ஆர் நகர் பகுதியில் கங்கன் என்ற 73 வயது முதியவர் வசித்து வருகிறார். அவர் சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கங்கன், நேற்று முன்தினம் வயிற்று வலியால் வீட்டில் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் இறந்து விட்டார். இதுகுறித்து வெங்கல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.