திருவெள்ளவாயல் அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
திருவெள்ளவாயல் அரசுப் பள்ளியில் போதை தடுப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.;
திருவெள்ளவாயல் அரசுப் பள்ளியில் போதை தடுப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வாயலூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள வாயலூர் குப்பம் பகுதியில் திருவெள்ளவாயல் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி மூலம் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள காட்டூர் காவல்நிலையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு போதை போன்ற தீய பழக்கத்தில் ஈடுபடாமல் இருப்பது குறித்து காவல்துறை மூலம் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு வாயலூர் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ஜி.கோபி தலைமை தாங்கினார் காட்டூர் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாணவ-மாணவிகள் தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது குறித்தும் மகளிர் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துலுக்காணம், தலைமை யாசிர் இளங்கோ, உதவி ஆசிரியர் உதயகுமார், மற்றும் காவல் துறையினர் கலந்துக் கொண்டனர்.