பொன்னேரி நகராட்சி: தலைவராக திமுக துணைத்தலைவராக அதிமுக

பொன்னேரி நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த பரிமளம் விஸ்வநாதன், துணைத்தலைவராக அதிமுகவை சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் தேர்வு

Update: 2022-03-05 04:45 GMT

பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக 15 இடங்களை வென்றது. அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.  இந்நிலையில் நேற்று நகர மன்ற தலைவர் துணைத் தலைவர் தேர்வு நடைபெற்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் 15 வாக்குகள் பெற்று நகரமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் துணை தலைவருக்கான தேர்வு நடந்தது இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயகுமார் 15 வாக்குகள் பெற்று துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து நகரமன்ற தலைவரை கட்சி நிர்வாகிகள் பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.  பின்னர் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகுமாருக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவு மான சிறுனியம் பலராமன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் பொன்னேரி பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைக்கு துணை தலைவர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News