மீஞ்சூர் பேரூராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்
மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய 18 வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய 18 வார்டுகளிலும் திருவள்ளூர் மாவட்ட உதவி இயக்குனர் அறிவுரையின்படி பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் உத்தரவுபடி வட்டாரம் முழுவதிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் பெய்த மழையால் வட்டாரங்கள் தோறும் அதிகப்படியான கொசு தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. மேலும், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வளாகத்தினுள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் பேரூராட்சி சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். கழிவுநீர் தேங்கும் கால்வாய்களில் கொசு மருந்துகள் தீவிரமாக தெளிக்கப்பட்டு வருகின்றன.