100 நாள் வேலை திட்ட சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஞாயிறு கிராமத்தில் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு சம்பள பாக்கி வழங்க வலியுறுத்தி வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-11 11:11 GMT

திருவள்ளூர் அருகே நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் சம்பள நிலுவை தொகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சோழவரம் அருகே 100நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காததால் 3மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு கூறப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கியை முற்றுகையிட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் பெண்களுக்கு கடந்த 3மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3மாத காலமாக ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காததால் 100நாள் திட்ட பணியாளர்கள் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தனர். 3மாதமாக நிலுவையில் உள்ள சம்பளத்தை இழப்பீடு தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும், சட்டப்படி 15நாட்களுக்குள் சம்பளத்தை வழங்கிட வேண்டும், 200நாட்கள் வேலையாக அதிகரித்து 600ரூபாய் ஊதியமாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முழங்கியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஒன்றிய அரசு பணியாளர்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News