மாணவி தற்கொலை: பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாணவி தற்கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பஜார் அருகே தேசிய மக்கள் நல திட்ட பிரச்சார பிரிவு சார்பில் அரியலூர் மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
பிரச்சார விளம்பர அமைப்பின் மாநில தலைவர் சோமுராஜசேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் ராஜீ, ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதமாற்றம் செய்ய முயன்ற பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், மாணவியின் தற்கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நஷ்டஈடுகள் வழங்க வேண்டும் என்று கோரி 100-க்கும் மேற்பட்டவர்கள் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.