அரசு பள்ளிகளில் சிலம்ப கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை

அரசு பள்ளிகளில் சிலம்ப கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2022-05-23 02:00 GMT

சிலம்ப கலைஞர்களுக்கு அரசு பள்ளிகளில் வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை வைத்தனர்.

திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூரில் இருந்து 10 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டி நடைபெற்றது எண்ணூர் காவல் ஆய்வாளர் மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கொடியசைத்து மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார்,

திருவொற்றியூர் எண்ணூர் காவல் நிலையம் போலீஸ் கிளப் மற்றும் சித்த வர்ம சிலம்ப போர்க்கலை அகடாமி நடத்தும் சிலம்ப விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 10 வயதிற்கு உட்பட்ட 300க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் இதில் கலந்து கொண்டனர்

சிலம்பக்கலையை பொதுமக்களுக்கு எடுத்துக் காட்டும் விதமாகவும் இந்த மாரத்தான் போட்டி நடைபெறுகிறது என்றும் அதேபோல் தமிழக அரசு சிலம்பகலைக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது என்றும்தற்பொழுது தமிழக பட்ஜெட்டில் அறிவித்த 10 கோடி விளையாட்டு திடலுக்கான திட்டத்தின் கீழ் சிலம்ப கலைகளுக்கும் தனி விளையாட்டு அரங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

அதேபோல் சிலம்ப ஆசான்கள் பலரும் இன்றும் பலரும் கஷ்டப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் விதமாக அனைத்து அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் சிலம்பக் கலையை கட்டாய கல்வியாக கொண்டுவந்து சிலம்ப ஆசான்களுக்கு பணி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

Tags:    

Similar News