பொன்னேரியில் அங்காளம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
Angalamman Temple -பொன்னேரி அருகே அங்காளம்மன் கோவில் ஆடித்திருவிழாவில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
Angalamman Temple - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் இரண்டாம் ஆண்டு ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு வேண்பாக்கம் தேவி கருமாரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு முளைப்பாரி ஊர்வலம் வானவேடிக்கையுடன் உற்சாகத்துடன் துவங்கியது. மேளதாளம் முழங்க, உடுக்கை சத்தம் ஒலிக்க அம்மன் வேடமணிந்தவர் பூங்கரகத்துடன் ஒய்யாரமாய் ஆடியபடி முன்னே செல்ல மஞ்சளாடை அணிந்த பெண்கள் அக்னி சட்டியை ஏந்தியபடியும் முளைப்பாரியை சுமந்தும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து அங்காளம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் முளைப்பாரியை அம்மன் காலடியில் வைத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காளம்மனை வழிபட்டு சென்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2