பெண்களை கேலி செய்து கொண்டிருந்த மர்ம நபர்களை தட்டி கேட்ட வாலிபருக்கு வெட்டு
2 மர்ம நபர்கள் அந்தப் பெண்கள் வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்து தகராறு செய்து கொண்டிருந்தனர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த உள்ள காஞ்சிவாயில் வசித்து வருபவர் மணிகண்டன்.(30) இவர் பொன்னேரி அடுத்த மெதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்களை வழி மறித்த இரண்டு மர்ம நபர்கள் தகராறு செய்து கொண்டிருந்தாராம்.
இதனை கவனித்த மணிகண்டன் அந்த மரும நபர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், அவர்கள் மறைத்து வைத்திருந்த வீச்சருவாளால் மணிகண்டனை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி காவல்துறையினர் சிகிச்சைக்காக மணிகண்டனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து, தாக்கிவிட்டு தப்பி ஓடிய இரண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.