பொன்னேரியில் காட்டன் சூதாட்டம்: கண்டித்து பா.ஜ.க. பொதுக்கூட்டம்
பொன்னேரியில் காட்டன் சூதாட்டம் கண்டித்து பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடந்த இடம் அருகிலேயே சூதாட்டம் நடைபெற்றது.;
பொன்னேரியில் தி.மு.க. அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் தி.மு.க. அரசு அறிவித்த குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 இன்னும் வழங்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து பொன்னேரி நகர பா.ஜ.க. சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை கூட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்த அதே வேளையில் இரண்டாண்டு சாதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொன்னேரியில் நடைபெற்ற கூட்டத்தால் பரபரப்பு நிலவியது. அந்த கூட்டத்தில் பொன்னேரியில் நடந்து வரும் பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து பா.ஜ.க.வினர் பட்டியலிட்டு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.
குறிப்பாக பொன்னேரியில் தலை விரித்தாடும் காட்டன் சூதாட்டம் குறித்து பேசிக் கொண்டிருந்த அதே வேளையில் மேடைக்கு பின்புறம் காட்டன் சூதாட்டம் அமோகமாக நடந்து கொண்டிருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் நகைத்து விட்டு சென்றனர். இதனை காவல்துறையும் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இச்செயலை கண்ட பா.ஜ.க.வினர் காட்டன் சூதாட்டம்,கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயலுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிற 15ஆம் தேதி நடை பயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.