ரோந்து வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதல்: 2 போலீசார் காயம்

மணலி புது நகர் அருகே கன்டெய்னர் லாரி ரோந்து வாகனம் மீது மோதியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் காயமடைந்தனர்.;

Update: 2021-05-11 18:04 GMT

சேதமடைந்துள்ள போலீஸ் ரோந்து வாகனம்

மணலி போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் டேவிட் பொன்குமார் மற்றும் தலைமை காவலர் சுஷில்குமார் ஆகியோர் நேற்று அதிகாலை பொன்னேரி நெடுஞ்சாலையிலிருந்து மணலி புதுநகர் அருகே ரோந்து வாகனத்தில் பணியில் இருந்தனர்.

அப்போது ஒரே திசையில் சென்ற கன்டெய்னர் லாரிகள் ஒன்றுடன் ஒன்று முந்தி செல்லும்போது சாலையோரம் நின்றுகொண்டிருந்த போலீசாரின் ரோந்து வாகனம் மீது மோதியது. இதில் ரோந்து வாகனம் தடுப்பு சுவரில் ஏறி, அணுகுசாலையில் பாய்ந்தது.

சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கன்டெய்னர் லாரி ஓட்டுநர்களான பாண்டியன்(35), பிரவீன்(35) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News