மீஞ்சூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் பாத யாத்திரை, பிரச்சார பேரணி
மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை பிரச்சார பேரணி நடைபெற்றது.;
மீஞ்சூரில் மத்திய பாஜக மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை பிரச்சார பேரணி.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை விளக்கி பாத யாத்திரை பிரச்சார பேரணி நடைபெற்றது.
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பிரச்சார பேரணியில் பங்கேற்றனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் மக்களை வாட்டி வதைக்கும் பாஜக அரசின் நடவடிக்கைகள் குறித்து பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர்.
மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து மக்களுக்கு குறைந்த செலவில் கிடைக்கும் சேவைகளை பன்மடங்கு விலை உயர்த்தும் நடவடிக்கைக்கு எதிராகவும் அப்போது முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய அரசின் மக்கள் விரோத செயல்கள் குறித்த துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.