அரசு ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கிய ஆட்சியர்

மீஞ்சூரில் அரசு ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Update: 2021-07-21 17:01 GMT

மாதிரி படம் 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு ரூ. 4.5 லட்சம் மதிப்பீட்டில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் சமூக மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து விடுதிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விடுதியில் தங்கும் மாணவர்களுக்கென கட்டில்கள், படுகைகள், உணவு பாத்திரங்கள், டிவி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். இதில் எண்ணூர் காமராஜர் துறைமுகத் தலைவர், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள், அரசுத்துறை அதிகாரிகள், எண்ணூர் காமராஜர் துறைமுக நிர்வாக அலுவலர்கள், அரசினர் விடுதி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News