பழவேற்காடு முகத்துவாரம் தூர்வாரும் பணிகள்; ஆட்சியர் நேரில் ஆய்வு
பழவேற்காடு முகத்துவாரம் தூர்வாரும் பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.;
பழவேற்காடு முகத்துவாரம் தூர்வாரும் பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமான முகத்துவாரத்தை தூர்வாரும் பணிகளை கடந்த மாதம் பூமி பூஜை போட்டு மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் தொடங்கி வைத்தார்.
அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதில் மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திபட்டு ஜி.ரவி, கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.