பொன்னேரியில் மக்களுடன் முதல்வர் முகாம்
மக்களுடன் முதல்வர் முகாமில் நலத்திட்ட உதவிகளை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார்.;
பொன்னேரி நகராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம், எம்எல்ஏ துரை சந்திரசேகர் துவக்கிவைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, பொன்னேரி நகராட்சியில் தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
முகாமிற்கு பொன்னேரி நகராட்சியின் தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகித்தார், ஆணையாளர் கோபிநாத், பொறியாளர் குமார், துணைத் தலைவர் விஜயகுமார் பொன்னேரி நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்
இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார் முகாமில் நகராட்சியில் அடங்கிய 10,11,12,15,16,17, 18,26,உள்ளிட்ட 8 வார்டுகளில் அடங்கிய பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கான சான்றிதழ்களையும், அவர்களின் வாழ்வாதாரம் குறித்து அனைத்து தேவைகளுக்கும் மனுவாக தயார் செய்து முகாமில் உரிய அதிகாரிகளிடம் வழங்கி உரிய சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
இதில் எரிசக்தி துறை குடிநீர் வழங்கல் துறை பேரிடர் மேலாண்மை துறை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட 13 துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் நல்லசிவம்,உமாபதி, பத்மாவதி, பரிதா ஜெகன், தனுஷா தமிழ் குடிமகன், ரேகா கதிரவன், யாக்கோபு, பரிதா ஜெகன், சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.