ஆரணியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் துவக்கம்
பெரியபாளையம் அருகே ஆரணியில் மக்களுடன் முதல்வர் என்கின்ற சிறப்பு முகாமை சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சி சார்பில், மக்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றும் வகையில் தொடங்கப்பட்டுள்ள மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ டிஜே.கோவிந்தராஜன், பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இந்த முகாமில் மின்சார வாரியம்,வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித் துறை,காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்களிடம் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு உரிய பதில் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்து.
இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார், ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் அர்ஜுன், பெரியபாளையம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன்,பேரூர் திமுக செயலாளர் முத்து, பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் சுகுமார், கவுன்சிலர்கள் கண்ணதாசன், ரகுமான் கான், பேரூர் திமுக பொருளாளர் கரிகாலன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,அரசு அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.