காய்கறி கடையில் பெண்ணிடம் செயின் பறிப்பு; சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு
பொன்னேரி அருகே, கடையில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியானது.;
பெண்ணிடம் செயின் பறிக்கும் சிசிடிவி காட்சி.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. சயனாவரம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கடையில் பொருள் வாங்குவது போல வந்த நபர் ஒருவர், கலைச்செல்வியின் பின்னால் நின்றிருந்தார்.
பின்னர் கலைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தாலிச் சங்கிலியை அறுத்துக் கொண்டு, வேகமாக தப்பி ஓட்டம் பிடித்தார். அங்கிருந்தவர்கள் சுதாரித்து, நீண்ட தூரம் அந்நபரை துரத்தியும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து கலைச்செல்வி பொன்னேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, தப்பி ஓடிய செயின் பறிப்பு திருடனைத் தேடி வருகின்றனர். செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.