பொன்னேரியை அடுத்த கடப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான வசந்த் அவரது வீட்டில் கருப்பு பூனை ஒன்றை வளர்த்து வந்தார். வசந்த் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரது மனைவி கவிதா வீட்டில் இருக்கும் போது பாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைவதற்காக வந்துள்ளது. இதனைக் கண்ட பூனை பாம்பை வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்து மடக்கிப் பிடித்து வீட்டிற்குள் நுழையாமல் பார்த்துக் கொண்டாலும் அஞ்சாமல் பூனை பதிலுக்கு சீறி மிரட்டியுள்ளது.. இதனைக் கண்ட வசந்த் மனைவி கவிதா அலறியடித்து கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் பாம்பு எங்கோ சென்று மறைந்தது. எஜமானருக்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாம்பிடம் இருந்து காப்பாற்றிய பூனையை அனைவரும் பாராட்டினர் நாமும் பாரட்டலாமே.