பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

பொன்னேரி அருகே பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பணம் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-07-28 09:30 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியை சேர்ந்தவர் ராஜா ( வயது 53). தனியார் நிறுவன ஊழியரான ராஜா அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி அண்மையில் குடி பெயர்த்துள்ளார்.

ஆடி மாதம் தொடங்கிய நிலையில் பழைய வீட்டில் இருந்து பொருட்களை இடமாற்றம் செய்யாமல் இருந்துள்ளார். பழைய வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புதிய வீட்டில் தூங்கி விட்டு காலையில் பழைய வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு கதவை அகற்றி அதிலிருந்த 10சவரன் தங்க நகைகள், 1கிலோ வெள்ளி பொருட்கள், 20000ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்துள்ளது.

இது குறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புகள் மத்தியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து நடைபெற்ற துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News