அழிஞ்சிவாக்கம்: கார் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் உயிரிழப்பு

அழிஞ்சிவாக்கம் அருகே கார் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;

Update: 2021-06-21 13:18 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் வசிப்பவர் கிஷோர் பாரத். ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர், 

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் வந்து தங்கியுள்ளார். இருளி பட்டியில் உள்ள தேஜா கம்பெனியில் தனது சொந்த ஊரான பிரதீப் கிளாரா என்பவருடன் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை 5 மணி அளவில் நடை பயிற்சி செய்வதற்காக அலுவலகத்திலிருந்து ஜனப்பபஞ்சத்திரம் நோக்கி சாலையில் ஓரமாக நடந்து சென்றுள்ளனர்.

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பிரதீப் கிளாரா மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News