அதிமுக வேட்பாளர்களுக்காக துணிக்கு சலவை செய்து பிரசாரம்
அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் நூதன பிரச்சாரம் மேர்கொண்டார்.;
பொன்னேரி நகராட்சியில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், நூதன பிரச்சாரம். லாண்டரி கடையில் துணிக்கு சலவை செய்து தொழிலாளியிடம் வாக்கு சேகரித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 27வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் வீதிவீதியாக சென்று அதிமுகவின் நகராட்சி தலைவர் வேட்பாளராக 17வது வார்டில் களமிறங்கும் பழனியாம்மாள் சங்கர் உள்ளிட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அவர்களுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, சாலையோர காய்கறி கடைக்கு சென்ற சிறுணியம் பலராமன் காய்கறி வியாபாரம் செய்து வித்தியாசமான வகையில் வாக்கு கேட்டார். இதனை தொடர்ந்து டீக்கடைக்கு சென்ற நகராட்சி தலைவர் வேட்பாளர் பழனியம்மாள் சங்கர் வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து லாண்டரி கடைக்கு சென்று துணியை சலவை செய்து சலவை தொழிலாளியிடம் வாக்கு சேகரித்தனர். தான் நகராட்சி தலைவராக வெற்றி பெற்றதும் பொன்னேரியில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் பாதுகாப்புடன் அமைதியான முறையில் தொழில் செய்திட பக்கபலமாக இருப்பேன் என பழனியம்மாள் சங்கர் உறுதியளித்து பிரச்சாரம் செய்தார்.