பொன்னேரி அருகே முருகன் கோவில் பூட்டை உடைத்து ரூ. 14 ஆயிரம் கொள்ளை

பொன்னேரி அருகே முருகன் கோவில் பூட்டை உடைத்து ரூ. 14 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2023-05-21 08:35 GMT

கொள்ளை நடைபெற்ற கோவில்.

பொன்னேரி அருகே குமரஞ்சேரி குமாரசாமி திருக்கோயில் பூட்டை உடைத்து உண்டியல் மற்றும் பீரோ உடைத்து சுமார் ரூ. 14 ஆயிரம் கொள்ளை போனது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே, குமரஞ்சேரி கிராமத்தில். பிரசித்தி பெற்ற அருள்மிகு குமாரசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் முக்கியஸ்தலங்களுல் ஒன்றாகிய இத்திருக்கோயிலில் வழக்கம்போல் நேற்று காலை கோவில் நடை திறந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலை கோவிலை பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். காலை நடை திறக்க வந்த பூசாரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இரவு மர்ம நபர்கள் கடப்பாரையால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கோவிலின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்து உண்டியலையும், உடைத்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் 12 ஆயிரம்.ரொக்கப் பணத்தையும், எடுத்துக்கொண்டு கோயிலில் உள்ளிருந்த பீரோவின் அறையை உடைத்து அதிலிருந்து ரூபாய் 2000 ஐயும் திருடிக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து கிராம பொது மக்களை அழைத்து தகவல் தெரிவிக்கப்பட்டது

பின்னர் இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல்துறையினரிடம் கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில்  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கப்பட்டது. இந்த கொள்ளை பற்றி போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News