ஆரணி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்
ஆரணி அருகே போந்தவாக்கம் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் ஊரைச் சந்திரசேகர் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவு அருந்தினார் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்.;
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே போந்தவாக்கத்தில் காலை உணவு திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் படிக்கின்ற மாணவி, மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை வழங்கப்பட்டு வருகிறது. நிலையில் இத்திட்டத்தின் கீழ் ஜூலை 15ஆம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவாக்க ப்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 3,999 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற 2,23,536 மாணவர்கள் பயன் தரும் வகையில இத்திட்டத்தினை இன்று திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள கீழ்சேரி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவுபடுத்தும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே போந்தவாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் இத்திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
இதில் சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன், சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், வட்டார கல்வி அலுவலர் பால் சுதாகர், தலைமை ஆசிரியர் ஜானகிராமன், ஊராட்சி மன்ற தலைவர் அசோகன், துணைத் தலைவர் உதயகுமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.