மீனவர்களுக்கிடையே எல்லை பிரச்சனை: பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்கத் தடை

Pazhaverkadu Lake-மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட எல்லை பிரச்சனையால் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-04 02:15 GMT

பைல் படம்.

Pazhaverkadu Lake-திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் காலாகாலமாக கடலிலும், பழவேற்காடு ஏரியிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அவ்வப்போது மீனவர்களுக்கு இடையே எல்லை பிரச்சினை காரணமாக மோதல்களும் நடைபெற்று வருகின்றன.

நடுவூர் மாதாக்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள இருதரப்பு மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. இது தொடர்பாக பல முறை வருவாய்த்துறை தலைமையில் அமைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

இதனையடுத்து நடுவூர் மாதாக்குப்பம் மீனவர்கள், பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை விதித்து பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா உத்தரவு பிறப்பித்துள்ளார். இருதரப்பு மீனவர்கள் பிரச்சினை ஏற்படாமல் மீன்பிடிக்க ஏதுவாக எல்லையை வகுப்பது தொடர்பாக மீன்வளத்துறைக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News