இரண்டு கட்சிகளும் ஒரே நேரத்தில் பிரச்சாரம் -பரபரப்பு!
மீஞ்சூரில் இரு கட்சி வேட்பாளர்களும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வாக்கு சேகரிக்க வந்ததால் பரபரப்பு.;
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தனித்தொகுதியில் அதிமுக வேட்பாளர் பலராமன் மற்றும் அவருடைய ஆதரவாளர்களும், திமுக தோழமைக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளர்கள் பொன்னேரி சட்டமன்ற தனித் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் வாக்குகளை சேகரிக்க மீஞ்சூர் பஜார் வீதியில் உள்ள மசூதியில் அதிமுக வேட்பாளர் ஆதரவாளர்களும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்களும் குவிந்தனர். ஒரே இடத்தில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் கூடுகையில் கொடிகளை ஏந்தியவாறு இஸ்லாமியர்களிடமும் பொதுமக்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இரு கட்சித் தொண்டர்களும் ஒரே இடத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் மசூதியில் இருந்த இஸ்லாமியர்களும் பொதுமக்களும் யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பெரும் குழப்பம் அடைந்தனர்.