பொன்னேரியில் தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து பொன்னேரியில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-09-09 08:00 GMT

பொன்னேரியில் தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொன்னேரியில் பட்டியல் இன மக்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசு எஸ்சி, எஸ்டி திட்டத்தின் கீழ் பட்டியல் இன மக்களின் மேம்பாட்டிற்காக வழங்கிய பல கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்தாமல் மீண்டும் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. இதனை  கண்டித்து, பா.ஜ.க.வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் பேரறிஞர் அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் திராவிடம் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி,மு,க, அரசு பட்டியலின மக்களுக்கு வஞ்சனை, துரோகம் செய்து விட்டதாகவும், மத்திய அரசு அனுப்பிய நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியதாகவும் பட்டின மக்கள் முன்னேற்றத்தில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை என்றும் திராவிடக் கொள்கை என்று கூறிக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக, கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News