சோழவரத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா
சோழவரத்தில் நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;
சோழவரத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது,
சோழவரத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா.காரனோடை வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் 122வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தில் காரனோடை வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.முதல் நிகழ்வாக ஒரக்காடு சாலை சந்திப்பில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இதனை தொடர்ந்து நாடார் சங்க அலுவலக வாயிலில் காமராஜர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை பறிமாறி கொண்டனர்.
இவ்விழாவில் சங்க தலைவர் ஜெ.பாலமுருகன், செயலாளர் எஸ்.ரவிக்குமார், பொருளாளர் டி.பி.பாண்டியன் மற்றும் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.