ரயில்வே மேம்பாலம் பணிகளுக்கான பூமி பூஜை

பொன்னேரி அருகே நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பணிகளுக்கான பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், டி.ஜெ. கோவிந்தராஜன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

Update: 2024-08-29 08:30 GMT

மேம்பாலம் பணிகளுக்கான பூமி பூஜையை செய்து அடிக்கல் நாட்டினார் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், டி.ஜெ.கோவிந்தராஜன்.

பொன்னேரி அருகே நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தை இணைப்பதற்கான ரூபாய் 44.50 கோடி மதிப்பீட்டில் பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பாலப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி  நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.ரயில்வே தண்டவாளத்தின் மேல் பாலப் பணிகள் முடிவடைந்த நிலையில் இணைப்பு பாலப் பணிகள் தொடங்கப்படாமலே இரண்டு வருடமாக இருந்து வந்தது.

இதற்காக அப்பகுதியில் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ரூபாய் 44.50 கோடி மதிப்பீட்டில் மேம்பால பணிகளுக்கு பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

ரயில்வே தண்டவாளத்தை கடப்பதற்காக பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த உயர்மட்ட மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ், திமுகவை சேர்ந்த திரளான கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News