அரசு பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை: அமைச்சர் பங்கேற்பு

56.லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-03-18 05:45 GMT

பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரணி பேரூராட்சி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மல்லியங்குப்பம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடங்கள் மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை.

எனவே, கூடுதல் கட்டிடங்களை கட்டித் தர வேண்டும் என பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கை ஏற்று கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு 15வது நிதிக்குழு சார்பில் ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த இரண்டு தொடக்க பள்ளிகளின் வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு கட்டிடங்கள் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நட்டு வைத்தார்.

மூன்று மாதங்களில் கட்டிடங்கள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் அறிவுறுத்தினார்.

இதில் மல்லியங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி பாலசுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் சந்துரு ஆரணி பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார், கவுன்சிலர்கள் கண்ணதாசன், ரஹ்மான் கான், சதீஷ், குமார், பிரபாவதி, சுபாஷினி ரவி, பேரூர் செயலாளர் முத்து, பேரூர் பொருளாளர் வழக்கறிஞர் கரிகாலன், ஒப்பந்ததாரர்கள் மங்களம் வெங்கடேசன், ஆனந்தன், மற்றும் மல்லியங்குப்பம் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்மலா, ஆரணி பள்ளி ஆசிரியர் தேவி சரோஜா ஆகியோர் உட்பட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News