பொன்னேரியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
பொன்னேரியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;
பொன்னேரியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊரவலம் நடைபெற்றது.
பொன்னேரியில் போதை ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்தினால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போலீசாரும் கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தினமும் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டு பிடித்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருக்கும் குடோன்கள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் போதை பொருட்களின் குறைந்த பாடில்லை.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் போதையில்லா தமிழகம் என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு கல்லூரியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரையில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, பொன்னேரி எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்று சாலையோரத்தில் இருந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடம் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதையில்லா தமிழகம் என்பதை கடைபிடிக்கும் வகையில் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், சட்டவிரோத பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து மக்கள் புகார் அளிக்க தயங்க கூடாது என அப்போது அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து காப்போம், காப்போம், இளைய சமுதாயத்தை காப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.