100 சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி

பழவேற்காட்டில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது.

Update: 2024-04-12 06:41 GMT

பொன்னேரியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் நூறு சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, பழவேற்காட்டில் நூறு சதவீதம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது.வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தித்துறை ஏற்பாட்டில் பிரச்சார வாகனங்கள் மூலம் பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது .

மேலும் பழவேற்காடு மீன் விற்பனை அங்காடி அருகே விழிப்புணர்வு வரைபடம் வரையப்பட்டு அதன் முன் மீனவ இளைஞர்கள் சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடத்தினர். வாக்களிப்பதன் அவசியத்தை குறித்தும் நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்தும் வாக்கிற்கு பணம் வாங்க மாட்டோம் உண்மையான ஜனநாயகப்படி நல்ல உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மாவட்ட பயிற்சி ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் மற்றும் மீன்வளத்துறை பொன்னேரி உதவியக்குனர் கங்காதரன், ஆய்வாளர்கள் பாரதிராஜா,செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் பக்ருதீன்,கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி, பழவேற்காடு மீனவ கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீனவ பொதுமக்கள் என ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News