பொன்னேரி வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆவணி மாத பிரதோஷ விழா

பொன்னேரி அருகே வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆவணிமாத பிரதோஷ விழாவில் நந்திக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Update: 2024-09-16 10:15 GMT

பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

பொன்னேரி அருகே வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆவணிமாத பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிவனை வழிபட்டு சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் சுமார் 300-ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

பிரதோஷ விழாவை முன்னிட்டு வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ வழிபாடு நடத்தப்பட்டது.விழாவின் சிறப்பம்சமாக ஆலயத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு பால், தேன்,பன்னீர், தயிர்,விபூதி, சந்தனம், இளநீர், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது, தேன் போன்ற பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களாலும், அலங்காரம் செய்யப்பட்டதை கூடியிருந்த பக்தர்கள் கண்குளிர கண்டு பக்திப்பெருக்குடன் வணங்கினர்.


இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க தையல்நாயகி சகிதமாக வைத்தியநாத சுவாமி மூன்றுமுறை ஆலய பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்த பிரதோஷ விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை தரிசித்து சென்றனர். பின்னர் பக்தர்களுக்கு நந்தி பகவானுக்கு பழங்களால் அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம், அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News