பொன்னேரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2021-08-17 08:57 GMT

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா அலுவலகம் எதிரில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் டிஜிட்டல் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு 27 மாதங்களுக்கான பஞ்சப்படி கிடையாது என அறிவிக்கப்பட்ட அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெய்கர் பிரபு மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News