பொன்னேரியில் தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு
பொன்னேரியில் தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வருவாய் துறையின் தேர்தல் பிரிவு சார்பில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு கலைக்கல்லூரி, அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி கிருஷ்ணாபுரம் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று கிராமிய நடனம், கவிதை மற்றும் ஓரங்க நாடகம் ஆகியவற்றின் வாயிலாக ஒவ்வொரு குடிமகனும் தேர்தலில் நியாயமான முறையில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்தும் வாக்களிப்பதற்காக யாரிடமும் கையூட்டு பெறக்கூடாது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
இதையடுத்து கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் செல்வகுமார், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் கனகவல்லி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.