முருகன் கோவிலில் அர்ஜுன் சம்பத் சாமி தரிசனம்
பொன்னேரி அருகே சிறுவாபுரி முருகன் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வேலுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வேலுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது,
வங்கதேசத்தில் கொல்லப்படும், விரட்டியடிக்கப்படும் சிறுபான்மையின இந்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். பெண்கள் கடத்தப்பட்டும், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டும் சமீபத்தில் நடைபெற்ற அரசியல் மாற்றத்தால் விரட்டியடிக்கப்படும் இந்துக்களை பாதுகாத்திட ஐ.நா மன்றம் தலையிட வேண்டும். அதானி குழுமத்தால் பொன்னேரி கல்லூரியில் வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்ததில் அரசியல் தேவையில்லை. நேற்று பொன்னேரி அரசு கல்லூரியில் காமராஜர் துறைமுகத்தால் திறக்கப்பட்ட கட்டிட திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் எம்எல்ஏ அழைப்பு விடுக்கவில்லை என போராட்டம் நடத்திய நிலையில், காமராஜர் துறைமுகம் என்பதற்கு பதிலாக அதானி துறைமுகம் என அர்ஜுன் சம்பத் கூறினார். அதானி நிறுவனத்தால் வரவேண்டிய குளச்சல் துறைமுகம், கேரளாவிற்கு சென்றுவிட்டதாக சாடினார்.
தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையை போக்கிட அதானி இங்கு தொழில் செய்து வருகிறார். . பாஜக சார்பில் தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணி செல்ல தமிழ்நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த போக்கு மாற வேண்டும். வங்கதேச இந்துக்களை பாதுகாத்திட வேண்டும் என ப்ரியங்கா காந்தி, கம்யூனிஸ்ட் கட்சியினர் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. மத அடிப்படையில் இந்துக்கள் ஒடுக்கப்படும் போது இந்துக்களை பாதுகாத்திட திமுகவும் குரல் கொடுத்திட வேண்டும். மணிப்பூர் பெண்களுக்காகவும், காஷ்மீருக்காகவும் போராடிய கனிமொழி குரல் கொடுக்காதது ஏன் என்றார்.
வங்கதேசத்தில் வந்த இஸ்லாமிய பெண்ணிற்கு நாம் அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும், அங்குள்ள இந்துக்களுக்கு யார் அடைக்கலம் கொடுப்பது எனவும், இந்துக்களை பாதுகாத்திட திமுகவும் குரல் கொடுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் வக்பு சொத்துக்கள் என்ற போர்வையில் பழனி, திருச்சி, கிராமங்களில் அவர்களுடைய சொத்துக்கள் என கூறுவதாகவும், இவற்றை சரிசெய்திட சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு நன்மை பயக்கும் என்றார்.
இந்து சமய அறநிலையத்துறை பழனியில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த உள்ள நிலையில் அதற்கு வரவேற்பையும் மாநாடு வெற்றியடைய வாழ்த்துக்கள். ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் கூழ் வார்க்கும் நிலையில் ஆலயங்களில் கூழ் வார்ப்பதற்கு தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கிட வேண்டும்.
மல்யுத்த வீரர் தினேஷ் போகத் உடல் கூடுதல் எடையால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பாஜக காரணம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு அது தவறான குற்றச்சாட்டு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட அனைவரும் துணை நிற்பதாகவும், இதில் செல்வப்பெருந்தகை மலிவான அரசியல் செய்வதாகவும், வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக கூறினார்.
தமிழ்நாட்டில் காமராஜரின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர கூடிய வல்லமை அண்ணாமலைக்கு மட்டுமே இருப்பதாக கூறினார். தேசிய கட்சி மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்றால் அது பாஜக மட்டுமே எனவும், பழைய காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் பாஜகவிற்கு வந்து கொண்டிருப்பதாக கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பெயரில் மட்டுமே சத்தியமூர்த்தி வார்த்தையில் மட்டுமே காமராஜர் இருப்பதாகவும், சத்தியமூர்த்தி தேசிய எண்ணங்கள் அனைத்தும் பாஜவில் மட்டுமே இருப்பதாக கூறினார்.
உதயநிதி இப்போதே சர்வ வல்லமை பொருந்திய அமைச்சராகவே உள்ளார், அது வாரிசு அரசியல், அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக கூறினார். இதில் நாம் கருத்து கூற வேண்டிய அவசியம் இல்லை, மூத்த கட்சி தலைவர் துரைமுருகனே இன்பநிதி வந்தாலும் ஏற்று கொள்வேன் என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு மிக மோசமாக உள்ளது, மக்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாடுவதாகவும், தினசரி கொலை, கொள்ளை நடைபெற்று வருவதாகவும், அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.