கூலி தொழிலாளர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை: பொதுமக்கள் வாக்குவாதம்.
பொன்னேரி அருகே நகை கடன் தள்ளுபடி நிகழ்ச்சியில் கூலி தொழிலாளர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை என கூறி வாக்குவாதம்.;
நகைக்கடன் தள்ளுபடி நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் நகைகளை வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டாவூர் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் 5சவரன் நகை தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் நகைகளை வழங்கினார். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். கூலி தொழிலாளர்களான தங்களது நகைகளை குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வைத்திருந்த நிலையில் தங்களுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்காததால் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் நடந்த நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்கவில்லை என கூறி திமுகவினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.