ஆரணி பேரூராட்சி மன்ற கவுன்சிலர் கூட்டத்தில் வாக்குவாதம்
ஆரணி பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களுடன் துணைத் தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஆரணி பேரூராட்சியில் நடைபெற்ற கூட்டம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் திமுக பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணியை அணிந்தபடி கூட்டத்தில் பங்கேற்றனர். பேரூராட்சியில் மூன்று கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் நடப்பதாகவும் வரவு, செலவு கணக்குகள் முறையாக சமர்ப்பிப்பது இல்லை எனவும் குற்றம் சாட்டி திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கருப்பு துணி அணிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தொடர்ந்து பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து வெளியே வந்த கவுன்சிலர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணைத் தலைவர் சுகுமாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக பேரூராட்சி வளாகத்தில் பரபரப்பு நிலவியது. திமுகவைச் சார்ந்த தலைவர் மீது அக்கட்சியைச் சார்ந்த கவுன்சிலர்கள் ஊழல் குற்றச்சாட்டு வைத்திருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ப்த்தியை ஏற்படுத்தி உள்ளது.