ஆரணி அரசு பள்ளியில், தங்க நாணயம் பரிசு பெற்ற மாணவியர்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், சிறந்த விளங்கிய ஆரணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது.;

Update: 2022-11-23 04:15 GMT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறந்த விளங்கிய மாணவிகளுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது. அடுத்த படம் - விழாவில் பங்கேற்ற மாணவியர்.

பொன்னேரி அருகே கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு, நகைக்கடை உரிமையாளரான மகாவீர் ஜெயின் குடும்பத்தின் சார்பில் ஆண்டுதோறும் தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டு வரப்படுகிறது.

கடந்தாண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சிறந்து விளங்கிய 7 மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த மாணவிக்கு 4கிராம் தங்க நாணயம், 2 மற்றும் 3ம் இடம் பிடித்த மாணவிகளுக்கு தலா 2கிராம் தங்க நாணயம் பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்வி ஆர்வலர் மகாவீர் ஜெயின் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பரிசு வழங்கி மாணவிகள் உயர்கல்வியினை தொடர்ந்து பயின்று, சாதனை பெண்களாக வர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். பெண்கள் கல்வியை கைவிடாமல் தொடர்ந்து உயர்கல்வி பயின்று, சமூகத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக மாணவிகளை ஊக்குவித்து ஆண்டுதோறும் தங்க நாணயம் பரிசளித்து வருவதாக, மகாவீர் ஜெயின் தெரிவித்தார்.

Similar News