அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு வழிபாடு

Anjaneya Temple Special Pooja அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சோழவரம் அருகே காரனோடைய் ஆஞ்சநேயர் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update: 2024-01-23 03:30 GMT

ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

Anjaneya Temple Special Pooja

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி  காரனோடையில் பாஜக சார்பில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு.பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடையில் பாஜக சார்பில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



ஆஞ்சநேயர் கோயில் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பாஜ நிர்வாகிகள் .

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் லயன் ரவிக்குமார் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஆயிரம் முழுவதும் வண்ண,வண்ண மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், குங்குமம், திருநீர், ஜவ்வாது, தேன், உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது.விழாவில் பங்கேற்ற பக்தர்கள் ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம் என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். கண்ணை கவரும் விதத்தில் வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் நிறைவாக சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதில் பாஜகவின் மாவட்ட. நிர்வாகிகள் புருஷோத்தமன், மோகன், ஒன்றிய நிர்வாகிகள் பாலா, சபரி, முனியாண்டி, நந்தகுமார்,சுதர்சன் மற்றும் பாஜக தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு ராம பக்த ஆஞ்சநேயரை தரிசித்து சென்றனர்.

Tags:    

Similar News