ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 960 மதுபாட்டில் பறிமுதல், மூவர் கைது!

ஆந்திராவிலிருந்து வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 960 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-06-04 08:12 GMT

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ் சூரில் மதுவிலக்கு காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் உத்தரவின்பேரில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் குமார் மற்றும் வினேய் குமார், வெங்கடேசன், ஏழுமலை உள்ளிட்ட காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது மாம்பழம் ஏற்றி வந்த சிறிய சரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட்டபோது ஆந்திராவிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.இதனையடுத்து 2லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட 960 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தலில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த முருகன், ஐசக், நாகராஜ் ஆகியோரை கைது செய்து சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News