மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவராக அலெக்சாண்டர் போட்டியின்றி தேர்வு

மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவராக அலெக்சாண்டர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2022-03-28 05:38 GMT

பொன்னேரி பேரூராட்சி துணை தலைவராக அலெக்சாண்டர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் பேரூராட்சி தலைவராக ருக்மணி மோகன்ராஜ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் 3-வது வார்டு தி.மு.க.வை சேர்ந்த அலெக்சாண்டர் மட்டும் மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டார்.

இதனையடுத்து துணைத்தலைவரான அலெக்சாண்டர் மீஞ்சூர் பகுதியில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார்.

Tags:    

Similar News