தமிழ்நாடு அரசை கண்டித்து ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி அருகே மீஞ்சூரில் தமிழ்நாடு அரசை கண்டித்து ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-04-22 04:00 GMT

பொன்னேரி அருகே மீஞ்சூரில் தமிழ்நாடு அரசை கண்டித்து ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூரில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் நீண்ட காலம் போராடி பெற்ற 8மணி நேர வேலை உரிமையை அழிக்க துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு துணை போகும் வகையில் தமிழ்நாடு அரசு மசோதாவை நிறைவேற்றியதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

மே தின பரிசாக இந்த சட்டம் தொழிலாளர்களுக்கு எதிராக நிறைவேற்றபட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 65ஏ சட்டம் வரலாற்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சட்டம் என்றும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News