பொன்னேரியில் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

பொன்னேரி நகராட்சியில் முன்னாள் எம்எல்ஏ பலராமன் தலைமையில் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

Update: 2022-02-16 02:15 GMT

பொன்னேரி நகராட்சியில் முன்னாள் எம்எல்ஏ பலராமன் தலைமையில் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னாள் எம்எல்ஏ பலராமன் தலைமையில் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து இரட்டை இலைக்கு சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து வரும் 19ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி இன்னும் மூன்று நாட்கள் உள்ளதால் முக்கிய கட்சிகள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் அதிமுகவினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான சிறுனியம் பலராமன் தலைமையில் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

இந்நிகழ்ச்சியில் 27 வார்டு வேட்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, நகர செயலாளர் உபயதுல்லா, பொன்னேரி பேரூராட்சி முன்னாள் தலைவர் சங்கர், அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், மற்றும் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர பிற அணி முக்கிய நிர்வாகிகள் கூட்டணி கட் சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து இரட்டை இலைக்கு வாக்களிப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News