25 ஆண்டுகளுக்குப்பின் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள்- ஆசிரியர்கள் சந்திப்பு
பொன்னேரி அருகே 25 ஆண்டுகளுக்குப்பின் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள்- ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருவெள்ளைவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1998ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கடந்த 1998ம் கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். பள்ளிக்கு வருகை தந்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர்.
இதனைததொடர்ந்து அனைவரும் செல்ஃபி எடுத்து தங்கள் 25 ஆண்டுகளின் முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பள்ளியின் சிதிலமடைந்த கட்டிடங்களை புதுப்பித்து கொடுத்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த பள்ளிக்கு நன்றி கடன் செலுத்தினர். தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.