தீராத வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை
ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள அஞ்சம் பேடு கிராமத்தில் தீராத வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை.;
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள அஞ்சம்பேடு கிராமத்தில் கடந்த 28ஆம் தேதி சங்கர் என்பவர் தீராத வயிற்று வலியால், வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லியை எடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த 01.04.2021 அன்று விடியற்காலை இறந்து விட்டார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.